என்ன பத்தியும் மீடியால பேசுங்கடா... கண்டெண்ட்டை கொளுத்தி போட்ட டிடிவி தினகரன்!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:50 IST)
திமுக - அதிமுக கைகோர்த்து செயல்படுகின்றனவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
இதனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்  தரப்பில் விருப்ப மனு விநியோகம் துவங்கியது.     
 
ஆனால், வருகிற உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதாவது மக்கள் இம்மூவரையும் தேர்ந்தெடுக்க முடியாது. வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க முடியும்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மேயர், நகராட்சி, பேரூராட்சிதலைவர் பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடக்கும் என, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி உள்ளது. 
 
நேரடி தேர்தல் நடந்தால், மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்று பயந்து, இந்த அவசர சட்டத்தை, அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில், வார்டுகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான இட ஒதுக்கீடு விபரங்கள் குறித்து, இதுவரை அரசும், தேர்தல் ஆணையமும், வெளிப்படையாக அறிவிக்கவில்லை.இந்த காரணத்தை கூறி, உள்ளாட்சி தேர்தலை, நீதிமன்றம் வழியே தடுக்கும் முயற்சிகளை, தி.மு.க., மேற்கொண்டுள்ளது. 
 
இப்போது அவசர சட்டத்தால், தேர்தலை நடத்த விரும்பாதவர்களுக்கு, மற்றொரு காரணத்தை, அரசு உருவாக்கி கொடுத்து உள்ளது. இந்த செயலை பார்க்கும்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பதில், திமுக - அதிமுக ஆகிய, இரண்டு கட்சிகளுமே, கைகோர்த்து செயல்படுகின்றனவோ என்ற, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்