அதிமுகவுக்கு தைரியம் இல்லை என்பது உண்மைதான்: டிடிவி தினகரன்

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:41 IST)
அதிமுகவுக்கு தைரியம் இல்லை என்பது உண்மைதான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைர் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டம் நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் அதிமுகவினருக்கு ஆண்மை இல்லை என கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்பதும் இதனை அடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து சரியானதுதான் என்றும் ஆனால் அந்த வார்த்தைகள் தவறானது என்றும் அதிமுகவுக்கு தைரியம் இல்லை என்பதுதான் உண்மை என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்