இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து கரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் கனஅடி நீருக்கு மேலாக கரூர் அடுத்த திருமுக்கூடலூருக்கு சென்றடைகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் காவிரி நதி பாயும் வேலாயுதம்பாளையம், நன்னியூர், தவிட்டுப்பாளையம், வாங்கல், அரங்கநாதன்பேட்டை, திருமுக்கூடலூர் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை கரூர் கலெக்டர் அன்பழகன் நேற்று முன் தினம் விடுத்ததோடு, தண்டோரோ மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கரூர் அடுத்த தவிட்டுப்பாளையம், காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்களை நேரில் சந்தித்த., மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பித்துரை, அப்பகுதியினை ஆய்வு செய்தார்.
அப்போது., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “காவிரியில் இரண்டு லட்சத்திற்கும் மேலான கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாயும், காவிரி நதிகளில் அணைகள் கட்ட வேண்டுமென்றால் கர்நாடகா அரசின் ஒப்புதல் பெற வேண்டும். தற்போது பெரும் நீர் உபரிநீர் அல்ல. இந்த நீரை கர்நாடகா அரசு தேக்கினால் அணைகள் உடைத்துக் கொண்டு, நமக்கு (தமிழகம்) தேவையான அளவு எந்த வித தேக்கமும் இல்லாமல் வந்து சேரும் என அவர் தெரிவித்தார்.