டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர்: அறுபதில் இவரும் ஒருத்தர்!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (13:14 IST)
அதிமுக சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பாக போட்டியிடுகிறார். இவரை சுயேட்சை வேட்பாளர் எனவும், ஜோக்கர் எனவும் விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.


 
 
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அவரை பன்னீர்செல்வம் பொன்னாடை போர்த்தி தங்கள் அணிக்கு வரவேற்றார்.
 
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ கண்ணப்பன், நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளேன். டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர். 60 சுயேட்சை வேட்பாளர்களில் ஒருவராகதான் டிடிவி தினகரனை பார்க்கிகிறோம். எங்கள் உண்மையான எதிரி திமுக தான்.
 
தற்போது குடும்ப ஆட்சியை நடத்தி வருபவர்கள் ஜெயலலிதாவால் கட்சியை கட்சியை விட்டே நீக்கப்பட்டவர்கள். எங்கள் அணியின் வேட்பாளர் மதுசூதனன் தான் ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெறுவார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 180000 வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றார்.
அடுத்த கட்டுரையில்