சசிக்கலாதான் அதிமுக பொதுச் செயலாளர்; அதனால்தான் அதிமுக கொடி! – டிடிவி விளக்கத்தால் பரபரப்பு!

ஞாயிறு, 31 ஜனவரி 2021 (13:59 IST)
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிக்கலா அதிமுக கொடி உள்ள காரில் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமுடன் உள்ள அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சசிக்கலா அதிமுக கொடி முகப்பில் பொருத்தப்பட்டிருந்த காரில் பயணித்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிக்கலா காரில் அதிமுக கொடியை பொருத்தி கொள்ள அவருக்கு உரிமையில்லை என அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள டிடிவி தினகரன் “அதிமுக கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிமுக பொதுசெயலாளராக சசிகலாதான் உள்ளார். அதனால்தான் அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது” என கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்