சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகியுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமுடன் உள்ள அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சசிக்கலாவை வரவேற்று அதிமுகவினர் பலர் போஸ்டர் ஒட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கோவை, திருச்சி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் சசிக்கலா ஆதரவு போஸ்டர் ஒட்டியதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சசிக்கலா டிஸ்சார்ஜ் ஆகும் நிலையில் கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சசிக்கலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ராமநாதபுரம், மன்னார்குடி பகுதிகளிலும் சசிக்கலா ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவினரின் செயல்பாடுகளால் தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.