மினி கிளினிக் என்ற பெயரில் கொள்ளை! – மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஞாயிறு, 31 ஜனவரி 2021 (11:26 IST)
தமிழகம் முழுவதும் மினி கிளினிக் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் சில நாட்கள் முன்னதாக பல பகுதிகளில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. மேலும் பல இடங்களில் மினி கிளினிக்குகள் கட்டி தொடங்கி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கரூரில் கட்டப்பட்ட மினி கிளினிக் திறப்பு விழாவின்போதே இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”மினி கிளினிக்குகள் தரமாக கட்டப்படவில்லை. மினி கிளினிக் என்ற பெயரில் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்து வருகின்றனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்