தமிழக அரசு பெரும் வரலாற்று பிழை செய்கிறது! – டிடிவி தினகரன் வருத்தம்!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (12:13 IST)
டாஸ்மாக் கடைகளை திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக செயல்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளை மே 7 முதல் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் இந்த முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் “கொரோனா பாதிப்பு நீடிக்கும்போதே அவசர அவசரமாக மதுக்கடைகளை திறப்பது பழனிசாமி அரசின் தவறான சிந்தனை. முழு மதுவிலக்கை செயல்படுத்த இயற்கை வழங்கிய வாய்ப்பை ஆட்சியாளர்கள் தவறவிடுவது வரலாற்று பிழையாகும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்