திமுக ஐடி விங் டிவிட்டர் பக்கம் முடக்கமா? பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:05 IST)
திமுகவின் ஐடி விங் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டஹாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார் 
 
நேற்று இரவு திடீரென திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் செயல்படவில்லை இதனை அடுத்து அந்த டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது 
ஆனால் ஒரு மணி நேரத்தில் மீண்டும் அந்த டுவிட்டர் பக்கம் செயல்பட தொடங்கியது. இது குறித்து டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கூறியிருப்பதாவது
 
சந்தான பாரதிக்கும் அமித் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மந்திகளுக்கு தொழில் நுட்ப கோளாறுக்கும், முடக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை என்று கூறியுள்ளார்.
 
மேலும், புதிய சிஸ்டம் இடம் பெயர்வு காரணமாக சிறிய தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது என்றும், டிவிட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விரைவில் பிரச்னை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்