சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு இனி ரயில் வராதா? முக்கிய அறிவிப்பு..!

Siva
திங்கள், 1 ஏப்ரல் 2024 (09:01 IST)
சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் அவ்வப்போது சிக்னல் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதை அடுத்து அது குறித்த பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாகவும் இதன் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், கடற்கரை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆலப்புழையில் இருந்து வரும் அதிவிரைவு ரயில் ஏப்.2-ஆம் தேதி திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

பெங்களூரில் இருந்து வரும் மெயில் விரைவு ரயில், ஈரோட்டில் இருந்து வரும் ஏற்காடு விரைவு ரயில் ஏப்.2-ஆம் தேதி ஆவடியுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  ஹௌராவில் இருந்து வரும் விரைவு ரயில் ஏப்.1-ஆம் தேதி சென்ட்ரல் வருவதற்கு பதிலாக சென்னை கடற்கரை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்ட்ரலில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் ஏப்.3-ஆம் தேதி கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர், ஈரோடுக்கு ஏப்.2- ஆம் தேதி செல்லும் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

ஆலப்புழை-தன்பாத், கொச்சுவேலி-கோரக்பூர், இந்தூர்- கொச்சுவேலி விரைவு ரயில்கள் ஏப்.1, 2 தேதிகளில் சென்ட்ரல் வந்து செல்வதற்கு பதிலாக பெரம்பூர் வழியாக இயக்கப்படும்

இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்