அரக்கோணம் வழியே சென்னை செல்லும் ரயில்கள் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

Mahendran
புதன், 30 அக்டோபர் 2024 (10:38 IST)
.அரக்கோணம் வழியே சென்னை செல்லும் ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மின்சார ரயில் சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரக்கோணம் அருகே புளியமங்கலம் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிக்னலில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டதாகவும், இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

சென்னைக்கு தினந்தோறும் பணிகளுக்காக, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ஆத்திரம் அடைந்து, அரக்கோணம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிகையை அடுத்து சென்னை வழியாக சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிக்னல் கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரி செய்து வருவதாகவும், விரைவில் ரயில் போக்குவரத்து சீரடையும் என்றும் ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்