தாம்பரத்தை தொடர்ந்து அரக்கோணம் ரூட்டிலும் ரயில்கள் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Prasanth Karthick

ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (10:04 IST)

தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள், வெளியூர் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 

சென்னை செண்ட்ரல் - அரக்கோணம் இடையே பணிமனையில் நாளை முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.10 முதல் மதியம் 1.10 வரை சில மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் குறித்த விவரங்கள்

 

சென்னை செண்ட்ரலில் இருந்து காலை 9, 10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து

 

அரக்கோணத்தில் இருந்து 12 மற்றும் 14ம் தேதி காலை 11.15 மற்றும் 12 மணிக்கு சென்னை செண்ட்ரல் புறப்படும் மின்சார ரயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதியாக ரத்து

 

ஆகஸ்டு 12 மற்றும் 14ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை செண்ட்ரலில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதியாக ரத்து

 

மறுமார்க்கமாக 12 மற்றும் 14ம் தேதி திருத்தணியிலிருந்து மதியம் 12.35க்கு புறப்பட்டு செண்ட்ரல் செல்லும் மின்சார ரயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

 

12 மற்றும் 14ம் தேதி காலை 10 மணிக்கு வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சாரயில் சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து

 

12 மற்றும் 14ம் ஹேதி சென்னை செண்ட்ரல் - திருப்பதிக்கு 9.50க்கு புறப்படும் சிறப்பு ரயில் செண்ட்ரல் - திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்