மீண்டும் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் ரயில்கள்.. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை..!

Siva

செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:47 IST)
வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில், விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் திருப்பி விடப்பட்டன. தற்போது, மீண்டும் விழுப்புரம் வழியாக ரயில்கள் சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம்-விக்கிரவாண்டி இடையே உள்ள ரயில் பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பாதுகாப்பு காரணமாக இந்த வழியாக செல்லும் ரயில்கள் தஞ்சை வழியாக திருப்பி விடப்பட்டன. அதுமட்டுமின்றி, சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றி விடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று பிற்பகலுக்கு பின்னர் முண்டியம்பாக்கம் பாலத்தில் தண்ணீர் குறைந்ததை அடுத்து, தற்போது மீண்டும் அந்த வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், குறைந்த வேகத்தில் ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால், தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தடைவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்