தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்.. போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:08 IST)
சென்னை தீவு திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

அனைத்து விஐபி மற்றும் விவிஐபிகள் வாகனங்கள் மட்டுமே காமராஜர் சாலை, நேப்பியர் பாலம் வழியாக அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சீனியர் நடிகர்கள் நடிகைகள் அண்ணாசாலையில் உள்ள பல்லவன் பாயிண்ட் மற்றும் வாலாஜாபாத் பாயிண்ட் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.  

 தீவுத்திடல் வழியாக செல்லும்  மற்ற வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் அரசியல் கட்சியை நிர்வாகிகளின் வாகனங்கள்  அண்ணா சிலை வழியாக அனுமதிக்கப்படும் என்றும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் அவர்களுக்கு பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் அனைத்து வாகனங்களும் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை மற்றும் எம்எல்ஏ ஹாஸ்டல் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வணிக சம்மந்தமான வாகனங்கள் ஈவிஆர் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு  மேம்பாலம், கோயம்பேடு 100 அடி ரோடு வழியாக அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்