உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரு தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தின் குடும்ப நண்பரும் சக நடிகருமான விஜய் அழுதபடியே வந்து விஜயகாந்தின் உடலுக்கு இரங்கல் தெரிவித்தார். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். விஜய் ஆரம்பகாலத்தில் திரையுலக பயணத்தில் தடுமாறிக் கொண்டிருந்த போது செந்தூரப்பாண்டி படத்தில் அவரோடு இணைந்து நடித்து அவருக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் விஜயகாந்த் என்பவர் குறிப்பிடத்தக்கது.