ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி:

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (19:27 IST)
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது போல் சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன ஒகேனக்கல் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தற்போது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள உள்ளூர் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்