கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 12 - 18 வயது சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (12:05 IST)
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 - 18 வயது சிறுவர்களுக்கு செலுத்த மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி. 

 
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
 
மேலும் பைசர், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 - 18 வயது சிறுவர்களுக்கு செலுத்த மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 
 
ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதன் ஒரு தடுப்பூசி விலை ரூ.145 மற்றும் வரிகள் என்று சொல்லப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் 15-18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்