சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி: நவம்பர் 30ஆம் தேதி டெண்டர்

புதன், 23 நவம்பர் 2022 (17:03 IST)
ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுற்றுலா பொருட்காட்சி நடைபெறவில்லை
 
இந்த நிலையில் இந்த ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியை சிறப்பாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. நவம்பர் 30-ஆம் தேதி இந்த டெண்டரை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது 
 
திமுக ஆட்சியில் தொடங்கியவுடன் நடைபெறும் முதல் சுற்றுலா பொருட்காட்சி என்பதால் இதில் அரசின் திட்டங்களை முன்னிறுத்தும் வகையில் அரங்குகளை அமைக்க அனைத்து துறைகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்