வட சென்னை ; நடுக்கடலில் உருவான சூறாவளிக் காற்று - அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (10:37 IST)
சென்னை காசிமேடு அருகே நடுக்கடலில் இன்று காலை திடீரெனெ உருவான சூறாவளிக்  காற்றின் வீடியோ வெளியாகியுள்ளது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு மழை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று மழை பெய்ய தொடங்கிவிட்டது. சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில், காசிமேடு மீன்பிடித்துறைமுகம் அருகே நடுக்கடலில் இன்று காலை அதிக உயரத்திற்கு ஒரு சூறாவளி காற்று ஏற்பட்டது. அது அங்கும் இங்குமாக நகர்ந்து திருவொற்றியூர் பகுதிவரை சென்று படிப்படையாக மறைந்தது. 
 
இதுபோன்ற சூறாவளியை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் மீன் பிடி படகுகள் எதுவும் செல்லவில்லை என்பதால் எந்த விபத்தும், சேதமும் ஏற்படவில்லை.
 
இந்த சூறாவளி காற்று பற்றி ஆராய்ந்த பின்பே அது ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரிய வரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்