கோயம்பேடு சந்தை வளக்கம் போல் இயங்கும்: வியாபாரிகள் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (19:48 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. இதுவரை தமிழகத்தில் மட்டும் 15 கொரோனா போன வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
இதன் காரணமாக அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும், மற்ற அனைத்து கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என்றும் இல்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இந்த நிலையில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான காய்கறிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நாளை வழக்கம் போல் இயங்கும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
 
ஆனால் அதேநேரம் காய்கறி வாங்க வருபவர்கள் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறிகள் மார்க்கெட் திறந்திருக்கும் என்பதால் சென்னை முழுவதும் நாளை காய்கறிகள் வழக்கம்போல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்