உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இன்று தொடங்குகிறது

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (07:02 IST)
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கவிருப்பதால் இப்போது முதலே பார்வையாளர்கள் குவிய தொடங்கிவிட்டனர்.

ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்ற ஞாபகம் வரும் அளவிற்கு இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இந்த வீர விளையாட்டை காண உலகின் பல நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வருவதுண்டு

இந்த நிலையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,400 காளைகளும், 848 காளையர்களும் பங்குபெறவுள்ள்னர். இந்தா போட்டியை போட்டியை காண ஆயிரக்கணக்கன பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அலங்காநல்லூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும், பொங்கல் தினத்தில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் எந்தவித பிரச்சனையும் இன்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்