50 வது நாளில் சாதனை படைத்த'' புஷ்பா'' திரைப்படம்

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:54 IST)
கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில், புஷ்பா திரைப்படம்  உலகம் முழுவதும் வசூல் குவித்துள்ள நிலையில் இப்படத்தில் டிஜிட்டல் ரைஸ்ட் மூலமாகவும் அதிக தொகை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படமாக புஷ்பா  இடம் பிடித்துள்ளது.

தமிழில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மாஸ்டர் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் வசூலையும் தாண்டியுள்ள நிலையில் அல்லு அர்ஜூன் கேரியலில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்நிலையில் புஷ்பா படம் வெளியாகி 50  நாட்கள் ஆகிறது. எனவே இப்படம் இதுவரை ரூ.365 கோடி வசூல் ஈட்டியுள்ளதா அதிகாரப்பூர்வமாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் 2 வது பாகவும் விரைவில் வெளியாகி சாதனை படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்