105வது நாளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (07:13 IST)
கடந்த 104 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் உயராத நிலையில் இன்று 105 ஆவது நாளாகவும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் 5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை.
 
இந்த நிலையில் 105வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது 5 மாநில தேர்தல் விரைவில் முடிவடையும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் கணிசமாக பெட்ரோல் டீசல் விலை உயரும் என அஞ்சப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்