சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (07:44 IST)
கடந்த 8 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு இல்லை என்றாலும் அதற்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் 75 காசுகள் உயர்ந்தது என்பது தெரிந்ததே 
 
தற்போது பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி உள்ள நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்