பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றமா?

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (07:00 IST)
கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு அதாவது உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடையும் வரை பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ 91.43 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை கடந்த 2 மாதங்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்