விஜயகாந்த் மறைவு எதிரொலி: தமிழகத்தில் திரையரங்கு காட்சிகள் ரத்து..!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (10:34 IST)
கேப்டன் விஜயகாந்த் மறைவு காரணமாக இன்று தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னை மியாட் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு காரணமாக இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்