மு.க.ஸ்டாலின் -சந்திரசேகரராவ் இன்று சந்திப்பு! 3வது அணிக்கு அடித்தளமா?

Webdunia
திங்கள், 13 மே 2019 (08:08 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முயற்சித்தார். ஆனால் இந்த சந்திப்பு எதிர்பாராத சில காரணங்களால் நடைபெறவில்லை. மேலும் இரு தரப்பில் இருந்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களும் வெளியாகின
 
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.கஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இன்னும் ஒரே ஒரு கட்ட தேர்தல் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதால் மூன்றாம் அணி ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின், சந்திரசேகரராவ், மாயாவதி, மம்தா, அகிலேஷ் யாதவ், போன்ற தலைவர்கள் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இருப்பினும் இந்த அணிக்கு ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்