ஏகாதசிக்கு லட்சக்கணக்கில் கூடியது அத்திவரதர் கூட்டம்

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (12:57 IST)
இன்று ஏகாதசியும், விடுமுறையும் சேர்ந்து வருவதால் அத்திவரதரை காண காலையிலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் அலைமோதுகிறது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அபூர்வ நிகழ்வான அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பல்வேறு வசதிகளை நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று பெருமாளுக்கு உகந்த ஏகாதசி நாள் என்பதாலும், விடுமுறை நாள் என்பதாலும் அத்திவரதரை தரிசிக்க விடியற்காலையிலேயே லட்சக்கணக்கில் மக்கள் குவிய தொடங்கிவிட்டனர். பேருந்துகளும், ரயில்களும் அலைமோதும் மக்கள் கூட்டத்தில் சிக்கி தவிக்கின்றன. காலையிலேயே மக்கள் கூட்டம் இரண்டு லட்சம் அளவில் கூடியிருப்பதால், அத்திவரதரை தரிசிக்க கார், வேன்களில் வருபவர்கள் ஊருக்கு வெளியே நிறுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கூட்டம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் அத்திவரதரை சயன கோலத்தில் தரிசிக்க இன்னும் 4 நாட்களே உள்ளதால் பக்தர்கள் அதற்குள் அத்திவரதரை தரிசிக்க குவிகிறார்கள். ஆகஸ்டு 1 முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்