நேற்று 1400 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் சரிவு

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (09:46 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக பெரும் சரிவில் உள்ளது என்பதும் இதனால் லட்சக்கணக்கான கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்து உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக நேற்று 1400 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று மிகப்பெரிய சரிவு ஏற்பட்ட நிலையில் இன்று ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 147 புள்ளிகள் சரிவு 52 ஆயிரத்து 700 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 730 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்