முதல் நாளே தொழில்நுட்ப கோளாறு: நீடிக்கும் மெட்ரோ ரயிலின் இலவச பயணம்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (08:21 IST)
சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தகட்ட பாதையான டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான தடத்தில் நேற்று முதல் மெட்ரோ ரயில் இயங்க தொடங்கியது. இதனையடுத்து நேற்று சென்னை மாநகர் முழுவதும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் நேற்று ஒருநாள் மட்டும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இலவச மெட்ரோ ரயில் பயணம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் எதிர்பாராத வகையில் டிஎம்எஸ் மற்றும் விமானநிலையம் இடையே நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 மணி நேரத்திற்கும் மேலாக மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற ரயில்களின் சேவையும் காலதாமதம் ஆனது. எனவே இலவச ரயில் பயணம் செய்ய வந்த பொதுமக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகள் இன்று இரவு 10 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக இன்று காலை முதல் சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் குறிப்பாக அண்ணா சாலையில் உள்ள பல மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்