காற்றழுத்த பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியது – இன்று இரவே கரையை நெருங்கும்!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:15 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை – ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்