அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தரவரிசையில் கீழ்நிலை: குரூப்-4 தேர்வு முடிவுகளில் குளறுபடியா?

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (09:49 IST)
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த தேர்வு முடிவில் பல குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10,100 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னால் நடந்த நிலையில் அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. 
 
18 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவை பார்த்த பல அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் கீழ் நிலையில் இருப்பதாகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் உயர் நிலையில் இருப்பதாகவும் தேர்வர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
 
இந்த குளறுபடிகளை சரி செய்து சரியான முடிவுகளை வெளியே வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் இதற்கு டிஎன்பிஎஸ்சி என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்