தமிழகத்தை நோக்கி 2 புயல்கள்: வதந்தி என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (00:22 IST)
கடந்த சில மணிநேரங்களாக பெரும்பாலான ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் தமிழகத்தை நோக்கி இரண்டு புயல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த புயல்களால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



 
 
ஆனால் இந்த செய்தி தவறானது என்றும், இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வடகிழக்கு பருவமழை இன்னும் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரியவில்லை என்றும், ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளில் தாழ்வழுத்தம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற செய்தியை ஊடகங்கள் வெளியிடும் முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து வெளியிட வேண்டும் என்றும் அவர் ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்