தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (19:09 IST)
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் பின் பனிக்காலம் முடிவடைந்த நிலையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
 
தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மட்டும் இலாசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்