ரேஷன் அரிசியை விற்றால் ரேஷன் பொருட்கள் கிடையாது! – தமிழக அரசு!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (08:35 IST)
ரேஷன் அரிசியை விற்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் நிலையில் தமிழக ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. கடத்தியது ரேஷன் அரிசிதான் என உறுதிப்படுத்திய நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு “ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு கை ரேகை பதிவின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளது. மேலும் ரேஷன் அரிசியை வெளியில் விற்போருக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்தவும், போலி ரேசன் அட்டைகளை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்