இந்தியா முழுவதும் கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் அத்தியாவசப் பொருட்களான அரிசி, பருப்புவகைகள், காய்கறிகள், பிரட் பாக்கெட்டுக்கள், நாப்கின், துணிமணிகள், உள்ளாடைகள், பெட்ஷிட்கள் என அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு கேரள வெள்ள நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து துறைகளிலும் பணிபுரியும் 14 லட்சம் பேர் கேரள நிவாரண நிதிக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்க முடிவு செய்திருந்தனர்.