கேரள முதலமைச்சருக்கு பாஜக கண்டனம்!

வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (18:21 IST)
கேரள மாநிலத்துக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்ததை அடுத்து கேரள பாஜக மாநில தலைவர் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்தனர்.
 
கேரள மாநிலத்துக்கு வெள்ள் நிவாரண நிதி இந்தியா மட்டுமன்றி உலம் முழுவதும் பல நாடுகளில் இருந்து வந்தது. மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து ஐக்கிய அர்பு அமீரகம் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி அறிவித்தது என்ற செய்தி வெளியானது. 
 
மத்திய அரசை பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் மத்திய அரசு வெளிநாடுகளின் உதவியை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஐக்கிய அரபு அமீரகம், வெள்ள நிவாரண நிதி ரூ.700 கோடி வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா, கேரளாவிற்கு நிதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
 
ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 வழங்குவதாக் அறிவித்த செய்தி வெளியாதையடுத்து கேரளாவில் மோடிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:-
 
கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ 700 கோடி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் கூறவே இல்லை. நிலைமை இப்படியிருக்க இதுதொடர்பாக மாநில முதல்வர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும். எங்கிருந்து இந்தத் தகவலை அவர் பெற்றார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
 
வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவது தொடர்பாக தயக்கங்களை வெளியிட்டவுடன் மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவதூறு பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மோடியின் அரசு தவிர வேறு எந்த மத்திய அரசும் மாநிலத்திற்கு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கியதில்லை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்