சென்னையில் 1.50 மக்களுக்கு காலை உணவு: தமிழக அரசு தகவல்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (14:08 IST)
சென்னையில் 1.50 மக்களுக்கு காலை உணவு: தமிழக அரசு தகவல்
சென்னையில் ஒன்றரை லட்சம் மக்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னையே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பதும் பல வீடுகளில் வெள்ளம் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வெள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒன்றரை லட்சம் பேர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
மேலும் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி விட 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வெள்ள நிவாரண பணிகளை தமிழக முதல்வர் முடிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பான முறையில் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்