தனியார் மருத்துவமனைகளிடம் தடுப்பூசி வாங்கி இலவசமாக வழங்க திட்டம்!

செவ்வாய், 20 ஜூலை 2021 (16:01 IST)
தனியார் மருத்துவமனைகளிடம் தடுப்பூசி வாங்கி இலவசமாக வாங்கி தமிழ்நாடு மக்களுக்கு இலவசமாக வழங்க அரசு திட்டம். 

 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவதற்கு தடுப்பு ஊசி செலுத்தப்படுவதும் ஒரு காரணம். ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை அவ்வப்போது ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது தமிழகத்திற்கு கூடுதலாக 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே நாட்டின் 5 பெரிய நகரங்களில் சென்னையில் மட்டும் 2 ஆம் தவணை தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் 11%, பெங்களூரு 10%, டெல்லி மற்றும் மும்பையில் தலா 7% பேருக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இலவச தடுப்பூசி திட்டத்தை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவிலேயே முன்மாதிரியாக தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வாங்கி அவற்றை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை தமிழக அரசு செய்கிறது என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்