இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக மின்னல் வெட்டு !

செவ்வாய், 20 ஜூலை 2021 (10:20 IST)
இந்தியாவில் அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல். 

 
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் முறை அதி பயங்கர மின்னல் வெட்டு ஏற்பட்டதாக ஆராஉச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்னல் வெட்டு அதிகம் ஏற்படும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. 
 
இதன் பின்னர் ஆந்திரா, கர்நாடகா, ஓடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் 1,323 முறை அதிபயங்கர மின்னல் வெட்டு தாக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்