ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு

Webdunia
வியாழன், 17 மே 2018 (17:01 IST)
ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட, படுக்கை வசதி கொண்ட புதிய பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.

 
2016-17ன் ஆண்டிலேயே இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. அதன் பின் அதற்கான பணிகள் நடைபெற்றன. சிற்றுந்துகள் மற்றும் பெரிய பேருந்துகள் உருவாக்கப்பட்டது. இந்த பேருந்துகளை முதல்வர் பழனிச்சாமி மற்றும் போக்குவரத்த்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் பார்வையிட்டனர். 
 
இந்த பேருந்துகளைல் ஜி.பி.எஸ் வசதி, உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா, டிஜிட்டல் பெயர் பலகை, டிரைவர் மது அருந்தினால் பேருந்தை 'ஸ்டார்ட்' செய்ய முடியாத தொழில்நுட்பம், டிரைவருக்கு மின் விசிறி, முன் செல்லும் வாகனத்தில் மோதுவதை தவிர்க்கும் தானியங்கி 'பிரேக் சிஸ்டம்', ஒரே நேர்க்கோட்டில் பஸ் செல்லவில்லை எனில் எச்சரிக்கை செய்யும் 'அலாரம்', பயணியர் பாதுகாப்புக்கு, தானியங்கி கதவுகள், சொகுசு சாய்வு மற்றும் வசதியான இருக்கை,  'டயரில்' காற்று குறைந்தால் எச்சரிக்கும் கருவி, பொத்தானை அழுத்தினால் திறக்கும் அவசரகால வழி என பல வசதிகள் இருக்கிறது.
 
இன்னும் 2 மாதத்தில் இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்