தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம்

Webdunia
புதன், 23 மே 2018 (13:09 IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 
தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி, கண்ணீர்குண்டு, மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் தடியடியால் பலரும் காயமைடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தலைமை செயலாலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
 
அதன் படி, தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்