பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு....

வியாழன், 10 ஜூன் 2021 (16:29 IST)
சென்னை பல்கலைக் கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு  ஜூன் 21 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலை பரவிவரும் நிலையில் இன்னும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில்தான் கற்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பல்கலைகழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகல் வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான விரிவான அட்டவணை வரும் ஜூன் 14 ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும், ஜூன் 15 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியாகும் எனவும் இத்தேர்வுகள் 3 மணிவேரம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்