கொடிக் கம்பமே இல்லை... பிலா விட்ட தமிழக அரசு?

வெள்ளி, 22 நவம்பர் 2019 (18:47 IST)
சமீபத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது கட்சி பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது போல் மீண்டும் ஒரு சம்பவம் கோவையில் நடந்தது.
 
கோவையில் முதல்வரின் வருகையை ஒட்டி, பீளமேடு பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடி கம்பம், அச்சாலையில் ஒரு பெண் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது சாலையில் விழுந்தது. இதனை கண்ட அப்பெண் பைக்கை நிறுத்த முயற்சித்து தடுமாறி கீழே விழுந்தார்.
 
அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று அவர் மேலே ஏறியதில் இரு கால்களும் நசுங்கின. மேலும் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததில் மற்றோரு இளைஞரும் காயமடைந்தார். 
 
கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவரின் இடதுகாலை மருத்துவரகள் அகற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ராஜேஸ்வரி விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்