எப்படி மறைக்க போறீங்க!? ஸ்டிக்கர் ஃபார்முலாதான்! – பாட புத்தகத்தில் சென்சார்!

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (09:24 IST)
ஆர்.எஸ்.எஸ் குறித்த சர்ச்சைக்குரிய வாசகங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய புதிய பாடபுத்தகத்தின் சமூக அறிவியல் புத்தகத்தின் வரலாற்று பகுதியில் ”ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சுதந்திரத்துக்கு முன்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான் நிலைபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உள்ள அந்த பதிவை நீக்க வேண்டும் என தமிழக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுகுறித்த விசாரணையில் தமிழக அரசு, சர்ச்சைக்குரிய வாசகங்கள் நீக்கப்படும் என பதிலளித்துள்ளது.

இனிவரும் புத்தகங்களில் அந்த வாக்கியம் இடம் பெறாது எனவும், தற்போது அளித்துள்ள புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டி அந்த வாக்கியங்கள் மறைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்