அமெரிக்கா கிளம்பினார் துணை முதல்வர்: உற்சாகமாக வழியனுப்பிய அதிமுகவினர்

வெள்ளி, 8 நவம்பர் 2019 (07:27 IST)
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய நிலையில் நவம்பர் 8 முதல் 10 நாட்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டது
 
இதன்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அமெரிக்கா புறப்படும் முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரிடம் வாழ்த்து பெற்றார்.
 
இன்றிரவு அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கவுள்ளார். அதன்பின்னர் நாளை மறுநாள் சர்வதேச சமுதாய ஆஸ்கார் 2019’ விழாவில், துணை முதல்வருக்கு முக்கிய விருது ஒன்று அளிக்கப்பட உள்ளது. மேலும் அவர் வாஷிங்டன் டிசி, ஹுஸ்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் நடைபெறும பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். நவம்பர் 17-ஆம் தேதி துணை முதலமைச்ர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்