வலிக்காமல் கும்மி எடுக்கும் பிஎஸ்என்எல்: 80,000 பேருக்கு பக்கா ஸ்கெட்ச்!

வியாழன், 7 நவம்பர் 2019 (16:22 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பண பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே இந்த நஷ்டத்தில் இருந்து மீள தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 
 
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பண பயன்கள்:
1. பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.
2. பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.
 
இந்த பண பயனுள்ள ஓய்வு திட்டத்தை 80,000 ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்