ஊரடங்கு உத்தரவு மே 31க்கு பின்னும் நீடிக்கிறதா? பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (06:54 IST)
தமிழகத்தில் மே 31-ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் நீட்டிக்கப்படுமா? அல்லது மே 31ஆம் தேதியுடன்  கைவிடப்படுமா? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று மருத்துவர் குழுவினர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா? அல்லது கைவிடுவதா? என்பது குறித்த முடிவை அவர் எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கடந்த முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த முடிவை எடுக்கும் முன்னரும் அவர் மருத்துவக் குழுவுடன் ஆலோசித்தார் என்பதும், அதே போல் தற்போதும் அவர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும் தற்போது நடைமுறையிலிருக்கும் தளர்வுகள் தொடரும் என்று கூறப்படுகிறது. அது தவிர மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்தும் மருத்துவர்கள் குழுவுடன் அவர் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
 
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகம் என்பதால் ஊரடங்கு நீட்டிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்