நீட்டுக்காக சாகாதீங்க.. நானும் எவ்ளவோ முயற்சி பண்றேன்! – எடப்பாடியார் வேதனை!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (12:41 IST)
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டது இரங்கல் தெரிவித்த முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு எதிர்வரும் 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரியலூர் மாணவர் விக்னேஷ் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விக்னேஷை இழந்த அவரது குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர் விக்னேஷ் தற்கொலை சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தன்னால் ஆன அனைத்தையும் செய்து வருகிறது. மாணவர்கள் நம்பிக்கை இழந்து தற்கொலை போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்