பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: நாளை சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவு!

புதன், 19 பிப்ரவரி 2020 (19:21 IST)
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்
காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கபடும் என சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு ஆளுங்கட்சியில் இருந்து மட்டுமின்றி எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் திமுக உள்பட ஒரு சிலர் இது குறித்து குறை கூறினார்கள். வேளாண் மண்டலமாக மாற்றப்படும் அறிவிப்பு மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்றும் இதனை அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சற்றுமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை சட்டப்பேரவையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
முதல்வரின் இந்த அறிவிப்பு டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஏற்கனவே டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டால் அந்த முயற்சிகள் தடுக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்